திரைப்படம் : மௌன ராகம் பாடல் : பனி விழும் இரவு இசை : இளையராஜா
ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூ பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா...வா...வா..... பெண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது ~~@@~~ பின்னிசை ~~@@~~ பெண் : பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க ஆண் : பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க பெண் : மாலை விளக்கேற்றும் நேரம் மனதில் ஒருகோடி பாரம் ஆண் : தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவை இல்லாத தாபம் பெண் : தனிமையே போ....இனிமையே வா..... நீரும் வேரும் சேர வேண்டும்.
ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு ~~@@~~ பின்னிசை ~~@@~~ ஆண் : காவலில் நிலைகொள்ளாமல் தாவிடும் மனது பெண் : காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது ஆண் : ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும் பெண் : என்னைக் கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும் ஆண் : விரகமே ஓர் .... நரகமோ சொல் பூவும் முள்ளாய் மாறிப் போகும்
பெண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூ பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா...வா...வா..... ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு .....
திரைப்படம் : தங்க மகன் பாடல் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை இசை : இளையராஜா
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே பகலும் உறங்கிடும் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ ~~@@~~ பின்னிசை ~~@@~~ பெண் : வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்ட ஆண் : கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் பெண் : வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்ட ஆண் : கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் பெண் : வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும் வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும் ஆண் : ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ ~~@@~~ பின்னிசை ~~@@~~ ஆண் : மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற ஆண் : மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற ஆண் : வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே பெண் : நாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ ஆண் : சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே பகலும் உறங்கிடும் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ பெண் : ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ
திரைப்படம் : எந்திரன் பாடல் : கிளிமஞ்சாரோ மலைக் கனிமஞ்சாரோ இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
குழு : ஆஹா..ஆஹா ஆஹா..ஆஹா ஆண் : கிளிமஞ்சாரோ மலை கனி மஞ்சாரோ கன்னக் குழி மஞ்சாரோ யாரோ யாரோ குழு : ஆஹா..ஆஹா ஆண் : மோஹன்ஜதாரோ உன்னில் நொழஞ்சதாரோ பைய்ய கொழஞ்சதாரோ யாரோ யாரோ குழு : ஆஹா..ஆஹா பெண் : காட்டுவாசி காட்டுவாசி பச்சையாக கடியா முத்தத்தாலே வேகவெச்சு சிங்கபல்லில் உரியா குழு : ஆஹா..ஆஹா பெண் : மலைப்பாம்பு போல வந்து மான்குட்டிய புடியா சுக்கு மெளகு தட்டி என்னை சூப்பு வெச்சி குடியா ஆண் : ஏவாளுக்கு தங்கச்சியே என்கூடத்தான் இருக்கா ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா அக்கக்கோ அடி கின்னிக்கோழி அப்பப்போ என்ன பின்னிக்கோடி இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி பெண் : இப்பப்ப்.... எண்ணிக்கோ நீ ஆண் : கிளிமஞ்சாரோ மலைக் கனி மஞ்சாரோ கன்னக் குழி மஞ்சாரோ யாரோ யாரோ மோஹன்ஜதாரோ உன்னில் நொழஞ்சதாரோ பைய்ய கொழஞ்சதாரோ யாரோ யாரோ ~~@@~~ பின்னிசை ~~@@~~ ஆண் : கொடி பச்சையே எலுமிச்சையே உன் மேல் உன் மேல் உயிர் இச்சையே பெண் : அட நூறு கோடி தசை ஒவ்வொன்றிலும் உந்தன் பேரே இசை ஆண் : இனிச்சக்கரே அடிச்சக்கரே மனச ரெண்டா மடிச்சக்கரே பெண் : நான் ஊற வைத்த கனி என்னை மெல்ல ஆற வைத்து குடி ஆண் : வேர் வரை நுழையும் வெய்யிலும் நான் –நீ இலை திரை ஏன் இட்டாய் பெண் : உதட்டையும் உதட்டையும் பூட்டிக்கொண்டு ஒரு யுகம் முடித்து திற அன்பாய் ஆண் : அக்கக்கோ அடி கின்னிக்கோழி அப்பப்போ என்ன பின்னிக்கோடி இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி பெண் : இப்பப்ப்.... எண்ணிக்கோ நீ ஆண் : கிளிமஞ்சாரோ மலைக் கனி மஞ்சாரோ கன்னக் குழி மஞ்சாரோ யாரோ யாரோ குழு : ஆஹா..ஆஹா ஆண் : மோஹன்ஜதாரோ உன்னில் நொழஞ்சதாரோ பைய்ய கொழஞ்சதாரோ யாரோ யாரோ ~~@@~~ பின்னிசை ~~@@~~ பெண் : சுனைவாசியே சுகவாசியே தோல் கருவி எனை வாசியே ஆண் : என் தோள்குத்தாட பலா றெக்கை கட்டி கால் கொண்டாடும் நிலா பெண் : மர தேகம் நான் மரங்கொத்தி நீ வன தேசம் நான் அதில் வாசி நீ ஆண் : நூறு கிராம் தான் இடை உனக்கு இனி யாரு நான் தான் உடை பெண் : ஐந்தடி வளர்ந்த ஆட்டு செடி எனை மேய்ந்துவிடு மொத்தம் ஆண் : பச்சை பசும்புல் நீயானால் புலி புல் தின்னுமே என்ன குத்தம் பெண் : அக்கக்கோ நான் கின்னிக்கோழி அப்பப்போ எனை பின்னிக்கோ நீ இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ இப்பப்ப்...எண்ணிக்கோ நீ ஆண் : அக்கக்கோ அடி கின்னிக்கோழி அப்பப்போ என்ன பின்னிக்கோடி இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி பெண் : இப்பப்ப்.... எண்ணிக்கோ நீ
திரைப்படம் : தூங்காதே தம்பி தூங்காதே பாடல் : சும்மா நிக்காதீங்க இசை : இளையராஜா
பெண் : சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வெக்காதீங்க சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வெக்காதீங்க சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு பொண்ணு இருக்கு வேற என்ன வேணுங்க ஆண் : சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா அட சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி ~~@@~~ பின்னிசை ~~@@~~ பெண் : படுக்கை விரிச்சே படுத்தாச்சு ஆண் : ஐய்யோ .... பெண் : பொங்கி வெச்ச சோறும் வெறுப்பாச்சு அடிச்ச காத்தும் நெருப்பாச்சு அத்த மகன் மேலே நெனப்பாச்சு ஆண் : வண்ண மயிலே...ஏ...ஏ...ஏஏ...ஏ..!! வண்ண மயிலே மலர்ச்சரமே வண்டு குடையும் மாம்பழமே வளைச்சி புடிச்சி இழுத்து அணைச்சி காதல் தான் பண்ணுறேன் சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பெண் : பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு பொண்ணு இருக்கு வேற என்ன வேணுங்க சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வெக்காதீங்க ~~@@~~ பின்னிசை ~~@@~~ பெண் : வசமா புடிச்சேன் விடமாட்டேன் ஆண் : சிவனே..... பெண் : வேறொருத்தன் கைய்ய தொடமாட்டேன் ஆண் : பெருமாளே...... பெண் : ஒடம்ப வளர்த்தேன்எதுக்காக உள்ளபடி சொன்னா அதுக்காக ஆண் : மஞ்ச கெழங்கே...ஏ..ஏ...ஏ..ஏஏ..ஏ !! மஞ்ச கெழங்கே வருந்தாதே நெஞ்சு கொதிச்சி வெதும்பாதே அதுக்கும் இதுக்கும் சமயம் வரட்டும் யாருன்னு காட்டுறேன். பெண் : சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வெக்காதீங்க சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு பொண்ணு இருக்கு வேற என்ன வேணுங்க ஆண் : அட சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா
திரைப்படம் : பணக்காரன் பாடல் : இரண்டும் ஒன்றோடு இசை : இளையராஜா
ஆண் : டிங்..ட..டிங்...டாங்..ட...டிங்...ட..டிங்...டாங் டிங்..ட..டிங்...டாங்..ட...டிங்...ட..டிங்...டாங்
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது ........... ஒன்றும் அசையாமல் நின்று போனது ............ இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது ஒன்றும் அசையாமல் நின்று போனது பெண் : காதல் காதல் டிங் டாங் ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங் பெண் : ஆடல் பாடல் டிங் டாங் ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங் பெண் : இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது ஒன்றும் அசையாமல் நின்று போனது ~~@@~~ பின்னிசை ~~@@~~ பெண் : காதல் இல்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை ஆண்: வானம் இல்லா பூமிதன்னை யாரும் பார்த்ததில்லை பெண் : தேகம் எங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை ஆண் : நானும் கொஞ்சம் போடவேண்டும் சோதனை சோதனை பெண் : உங்கள் கை வந்து தொட்ட பக்கம் ஆண் : டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங் அன்பு முத்தங்கள் இட்ட சத்தம் பெண் : டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங் அங்கும் இங்கும் டிங் டாங் ஆண் : ஆசை பொங்கும் டிங் டாங் நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும் பெண் : இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது பெண் : இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது பெண் : காதல் காதல் டிங் டாங் ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங் பெண் : ஆடல் பாடல் டிங் டாங் ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங் பெண் : இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது -~~@@~~ பின்னிசை ~~@@~~ பெண் : காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன் ஆண் : தோளில் நீயும் சாயும்போது வானை மண்ன்னில் பார்த்தேன் பெண் : நீயும் நானும் சேரும்போது கோடையில் மார்கழி ஆண் : வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய்விரி பெண் : எங்கு தொட்டாலும் இன்ப ராகம் ஆண் : டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங் என்றும் தீராது நெஞ்சின் வேகம் பெண் : டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங் அங்கும் இங்கும் டிங் டாங் ஆண் : சொர்க்கம் தங்கும் டிங் டாங் பெண் : உந்தன் சேவை எந்தன் தேவை ஆண் : இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது ஆண் : இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது ஆண் : காதல் காதல் டிங் டாங் பெண் : கண்ணில் மின்னல் டிங் டாங் ஆண் : ஆடல் பாடல் டிங் டாங் பெண் : அள்ளும் துள்ளும் டிங் டாங் ஆண் : டிங்..ட..டிங்...டாங்..ட...டிங்...ட..டிங்...டாங்...ஹாஹாஹா பெண் : டிங்..ட..டிங்...டாங்..ட...டிங்...ட..டிங்...டாங்